
பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் !

புதுடில்லி, ஏப். 19-நாட்டின் மிகப் பெரிய பயணியர் வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி இந்தியா’, அதன் அனைத்து மாடல் வாகனங்களின் விலையையும், அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், சராசரியாக 0.9 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விலையை உயர்த்தி இருப்பதாக, கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு தெரிவித்துள்ளது.வாகன தயாரிப்பில், உள்ளீட்டு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, விலையை உயர்த்தி இருப்பதாக, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. மேலும் இவ்விலை அதிகரிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனம், ‘ஆல்ட்டோ’ முதல் ‘எஸ்.கிராஸ்’ வரை, பல்வேறு விதமான பயணியர் வாகனங்களை தயாரித்து வழங்கி வருகிறது.இந்நிலையில், உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வினால், தொடர்ந்து வாகனங்களின் விலையையும் இந்நிறுவனம் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரையிலான காலத்தில், இந்நிறுவனம், கிட்டத்தட்ட 8.8 சதவீதம் அளவுக்கு, வாகனங்களின் விலையை உயர்த்தி அறிவித்து உள்ளது.மாருதி சுசூகி மட்டுமின்றி; நாட்டில் உள்ள பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களும், உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு காரணமாக, வாகனங்களின் விலையை அதிகரித்து வருகின்றன.
Source : Dinamalar
இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் 29-வது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். அவரது 28 மாத பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து அடுத்த ராணுவ தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், இந்தியாவின் புதிய ராணுவ தளபதியை நியமித்து ஒன்றிய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஓய்வு பெற்ற பிறகு, அதாவது வரும் 30-ம் தேதி முதல் ராணுவத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பு ஏற்க உள்ளார்.
இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுக்குறித்த ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரான பாண்டே 1982-ம் ஆண்டு டிசம்பரில் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியராக நியமிக்கப்பட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பல்லன்வாலா செக்டரில் ஆப்ரேஷன் பராக்ரம் நடத்தப்பட்ட போது பொறியாளர் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே.
2001 நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட நடவடிக்கை பராக்ரமில் நாட்டில் மேற்கு எல்லையில் பெரிய அளவிலான படைகள் மற்றும் ஆயுதங்களை இந்திய ராணுவம் அணி திரட்டியது. லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே தனது 39 ஆண்டுக்கால ராணுவ வாழ்க்கையில், பொறியாளர் படைப்பிரிவுக்கும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள காலாட்படைப் படைப் பிரிவுக்கும், லடாக் செக்டாரில் ஒரு மலைப் பிரிவுக்கும், வடகிழக்கில் ஒரு படைப் பிரிவுக்கும் தலைமை தாங்கி உள்ளார். தற்போது ராணுவத்தில் கிழக்கு பிரிவுக்கு பாண்டே தலைவராக உள்ள நிலையில், இதற்கு முன் அவர் அந்தமான் நிக்கோபார் படைப் பிரிவில் தளபதியாக இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தியாவின் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Source : Newstm
100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க இல்லனா ஓடிப் போய்டுங்கள் என தயாரிப்பாளர்களுக்கு விஜய் கூறி வருவதாக மறைமுகமாக விளாசி எடுத்துள்ளார் பிரபலம் ஒருவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.
விமர்சன ரீதியாக படத்தை சந்தித்திருந்தாலும் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசியுள்ளார்.
300 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள் ஆனால் வசூல் குறைவாகத்தான் வருகிறது. 65 கோடி சம்பளம் வாங்கி வந்த ஹீரோ இப்போது 110 கோடி சம்பளம். ஓகே என்றால் வாங்க இல்லனா வராதீங்க என தயாரிப்பாளர்களுக்கு கட் அண்ட் ரைட்டாக கூறுகிறார் என பேசியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் 110 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக விஜய் தான் இருந்து வருகிறார் என்பதால் மறைமுகமாக விளாசி எடுத்துள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.
Source : Kalakkal Cinema
தமிழகத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இதனையடுத்து சட்டப்பேரவையில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் தாலுகா (வருவாய் வட்டம்) புதிதாக உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்றும், கடலூர் விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Source : Seithisolai
ஏழை எளிய மக்கள் தொடங்கி, நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் என அனைவரின் தேவைகளிலும் முக்கியமான இடத்தில் உள்ளது தங்கம்.
வீட்டு விசேஷம், முதலீடு என தங்கத்தின் மீதான நாட்டம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் இன்று (ஏப்ரல் 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,047 ஆக உள்ளது. நேற்று இதன் விலை 5,014 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 40,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 264 ரூபாய் உயர்ந்து 40,376 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இப்படி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் தங்கத்தின் விலை கடந்த ஆண்டுகளில் எப்படி இருந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தின் விலை என்ன? 20 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தின் விலை என்னவாக இருந்தது? அதன் முழு விவரம் இதோ. (தங்கத்தின் அளவு 10 கிராமில் கொடுக்கப்பட்டுள்ளது).
Source: https://www.bankbazaar.com/gold-rate/gold-rate-trend-in-india.html
Source : Tamil Spark
TNPSC Group IV: தமிழக அரசின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் – 4) பணிகளுக்கான விண்ணப்ப படிவங்களை வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.முன்னதாக, தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்பமதரா சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
முக்கிய தேதிகள்:
அறிவிக்கை நாள் | 30.03.2022 |
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிபதற்குரிய கடைசி நாள் | 28.04.2022 |
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் | 24.07.2022 |
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexamsin ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
2. எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒரு முறைப் பதிவு எனப்படும் நிரந்தரப் பதிவு (OTR) மற்றும் தன்விவரப் பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக் கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு முறைப் பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச்சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
3. ஒரு முறைப் பதிவில் பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை CD;DVD/Pen drive போன்ற ஏதேனும் பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
4. ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக் கணக்கை (One Time RegistrationID) உருவாக்க அனுமதியில்லை.
5. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய தனித்துவமான பதிவுக்கணக்கு மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவிட்ட தங்களது விவரங்களை பார்வையிடவும், புதுப்பிக்கவும் செய்யலாம். தங்களது ஒரு முறைப்பதிவு கடவுச் சொல்லினை வேறு நபரிடமோ (அ) முகவர்களிடமோ பகிர்ந்து கொள்ள கூடாது.
6. ஒரு முறைப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம் அல்ல. இது விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தன்விவரப் பக்கம் ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும். எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அறிவிக்கையில் “Apply என்ற உள்ளீடு வழியே நிரந்தரப் பதிவுக்குரிய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
7. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயரை தெரிவு செய்ய வேண்டும்.
8. புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்படும் இணையவழி விண்ணப்பம் உரியநடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.
9. இணையவழி விண்ணப்பத்தில் சில தளங்கள் திருத்த இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இறுதியானவையாகக் கருதப்படும். இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு திருத்தம் கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்படமாட்டாது.
தேர்வு முறை:
எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப்பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கு வெளியிடப்படும். சான்றிதழ்களின் சரிபார்ப்பிற்கு பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்கள், அவர்கள் சார்ந்த பிரிவு, காலிப்பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பதவி மற்றும் அலகு துறை ஒதுக்கீட்டின் பொருட்டு அவர்களின் தரவரிசையின்படி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
மேலும் விவாங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம். ஒரு முறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதர சந்தேகங்களை grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
Source : News18 Tamil