
100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க இல்லனா ஓடிப் போய்டுங்கள் என தயாரிப்பாளர்களுக்கு விஜய் கூறி வருவதாக மறைமுகமாக விளாசி எடுத்துள்ளார் பிரபலம் ஒருவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.
விமர்சன ரீதியாக படத்தை சந்தித்திருந்தாலும் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசியுள்ளார்.
300 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள் ஆனால் வசூல் குறைவாகத்தான் வருகிறது. 65 கோடி சம்பளம் வாங்கி வந்த ஹீரோ இப்போது 110 கோடி சம்பளம். ஓகே என்றால் வாங்க இல்லனா வராதீங்க என தயாரிப்பாளர்களுக்கு கட் அண்ட் ரைட்டாக கூறுகிறார் என பேசியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் 110 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக விஜய் தான் இருந்து வருகிறார் என்பதால் மறைமுகமாக விளாசி எடுத்துள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.
Source : Kalakkal Cinema