Posted on Leave a comment

டெல்டா மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இலங்கை, அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த மழையைப் பொருத்தவரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்.10: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.11,12: தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்…: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தலா 30 மி.மீ., தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், கடலாடி, ஆா்.எஸ்.மங்கலம், வட்டாணம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

Source : Dinamani